யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம்

user 24-Apr-2025 இலங்கை 63 Views

யாழ்ப்பாண யூரியூப்பர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த யூரியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு விசாரணை நேற்று (23) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்றன காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

பெண்ணொருவரை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளியொன்று வெளிவந்த நிலையில், அது சர்ச்சையாக மாறி இருந்தது. அத்தோடு, இந்த விடயமானது, நாடாளுமன்ற அமர்வில் கூட பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டிற்கு யூரியூபர் வந்திருந்த வேளை, ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கிருஸ்ணா மீது மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவரது விளக்கமறியல் திகதிகள் நிறைவுற்ற நிலையில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறான சூழ்நிலையில் இன்றையதினம் (23) விளக்கமறியல் திகதி நிறைவுற்றதையடுத்து மல்லாகம் நீதிமன்றத்தில் அவரை முற்படுத்தியவேளை அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி