மாகாணங்களுக்கு இடையில் அநுரவால் அவசரமாக அமைக்கப்படும் விசேட புலனாய்வு பிரிவு !

user 24-Dec-2024 இலங்கை 773 Views

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மாகாணங்களுக்கு இடையில் விசேட புலனாய்வு பிரிவுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 9 மாகாணங்களுக்கு இடையில் இராணுவத்தை அமைத்தால் அது அனைத்துலக ஊடகங்களிலும் கேள்விக்குட்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது.

எனவே, குற்றச் செயல்களை தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை மாகாணங்களுக்கிடையில் அமைப்பது போன்ற ஒரு போர்வையில் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.

கடந்த அரசாங்கத்திற்கு எதிராக அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, இலங்கையின் ஏனைய மாகாணங்களில் இருந்தும் இளைஞர்கள் பெருமளவில் கொழும்பை வந்தடைந்தனர்.

இது கடந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. எனவே, இவ்வாறானதொரு நிலை தனது அரசாங்கத்திற்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவே புலனாய்வு பிரிவுகளை அமைக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்கவின் நோக்கம் இனிவரும் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வது ஆகும்.

Related Post

பிரபலமான செய்தி