கடற்றொழிலாளர்களுக்கான தீர்வு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம் !

user 30-Dec-2024 இலங்கை 903 Views

இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக 2016ஆம் ஆண்டு ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும், அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் பிரச்சினை தீர்ந்து விடும் எனவும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச உப தலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தமிழகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தியா இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 2016ஆம் ஆண்டளவிலேயே இதற்கான தீர்வு காணப்பட்டு விட்டது. தற்போது அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் பிரச்சினை தீர்ந்து விடும்” என்றுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி