மத்தியக்கிழக்கின் பிராந்திய பதற்றம்!

user 06-Jan-2025 சர்வதேசம் 144 Views

இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் முழுவீச்சில் தயாராக உள்ளோம். இனியும் இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும் என ஈரான் தரப்பு வெளியிட்டுள்ள செய்தியானது மத்தியக்கிழக்கில் பெரும் போர் பதற்றத்திற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறித்த தாக்குதல் என்பது பிராந்திய அளவில் பெரிய போருக்கு அழைத்து செல்லலாம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி(Seyed Abbas Araghchi)  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும், கருத்து தெரிவித்த அவர், 

“இஸ்ரேல் தவறான நடவடிக்கை எதையும் செய்யாது என்று நம்புகிறேன்.  இனியும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்கினால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். பதிலடி கொடுப்போம்.

இந்த பதிலடி என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய போரை ஏற்படுத்தலாம்” என்றார்.

இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனத்தின் காசா மீது போர் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

காசாவில் ஹமாஸ் படை தளபதியையும், லெபனானில் ஹிஸ்புல்லா படை தளபதியையும் இஸ்ரேல் ஏற்கனவே கொன்றுவிட்டது.

இரு அமைப்புகளும் தலைமை இன்றி போர் தொடுக்கும் சூழலில் ஈரானை குறிவைத்துள்ளது இஸ்ரேல்.

ஈரான், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபரில் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் சார்பில் ஈரான் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது ஈரான் அணுஆயுத சோதனைகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டிவரும் நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி