யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் !

user 24-Jan-2025 இலங்கை 490 Views

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த முற்றுகை நடவடிக்கை நேற்றையதினம்(23.01.2025) மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதன்போது, பெருமளவிலான கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

உடுவில் பிரதேசத்தின் மல்வம் பகுதியில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடாத்தி வந்த 39 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கோடா, கசிப்பு மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Related Post

பிரபலமான செய்தி