2025 இல் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்பு இலக்கு!

user 24-Jan-2025 இலங்கை 355 Views

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) இந்த வருடத்திற்குள் மொத்தமாக 340,000 இலங்கை பிரஜைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான தனது இலக்கை அறிவித்துள்ளது.

நேற்று (23) வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் புதிதாக அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே SLFEB தலைவர் கோசல விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில், மொத்தம் 311,000 தனிநபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை 12% அதிகரிக்க பணியகம் திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்முறையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை தலைவர் மேலும் வலியுறுத்தினார்.

சில உரிமம் பெற்ற முகவர் நிலையங்கள் மோசடியான செயல்களில் ஈடுபடுவது தொடர்பான அறிக்கைகள் வெளிவந்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது அவர்களின் தகுதி பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Related Post

பிரபலமான செய்தி