வெடிகுண்டு மிரட்டல் - பாடசாலைகளுக்கு பூட்டு !

user 09-Dec-2024 இந்தியா 1518 Views

இந்தியா (India) தலைநகர் டெல்லியில் 40 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

நேற்று (08) இரவும் இன்று (09) காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த மின்னஞ்சலில் வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருக்க வேண்டுமானால் 30,000 அமெரிக்க டொலர் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை பாடசாலைக்கு வந்த சிறுவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைத்து சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசும் இந்திய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிகமாக தீயணைப்பு வீரர்கள் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள் மற்றும் காவல்துறை நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

 

 

Related Post

பிரபலமான செய்தி