நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை !

user 30-Jan-2025 இலங்கை 381 Views

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் சிறப்பு காவல் குழுவினால் புதன்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டு அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் அவரை தலா 200,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியது.

அதன்படி, இந்த வழக்கு பிப்ரவரி 3 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

கடந்த வாரம் அநுராதபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை, கடமையில் இருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post

பிரபலமான செய்தி