மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா!

user 10-Feb-2025 இலங்கை 115 Views

மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா (08) திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு விசேட பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் கௌரவ அதிதியாக வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திருமதி. எஸ்.ரவிராஜா ஆகியோர் கலந்துகொண்டு கௌரவித்திருந்தனர்.

இந் நிகழ்வின் பொது கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள், உயர் தரத்தில் சித்தி அடைந்து பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகிய மாணவர்கள் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் பல்வேறு சாதனைகள் படைத்த மாணவர்கள் ஆகியோர் அதிதிகளால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இந்நிகழ்வினை அலங்கரித்ததுடன், பிரதம அதிதியாக கலந்துகொண்ட வலயத்தின் கல்விப்பணிப்பாளரிற்கு

இதன்போது பாடசாலை நிருவாகத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி