வவுனியா பேருந்து நிலைய இருக்கைகளின் நிலை !

user 19-Mar-2025 இலங்கை 169 Views

வவுனியா பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு காயங்கள் ஏற்படுவதாக மக்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது முகநூல் பக்கங்களில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகி பரவலாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி