இஸ்ரேலிய பணய கைதிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

user 15-Feb-2025 சர்வதேசம் 328 Views

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ்  இன்று விடுதலை செய்ய உள்ளது.

அதற்கமைய, பணய கைதிகளில் 3 ஆண்களை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி, இஸ்ரேலிய பணய கைதிகள் யாஹர் ஹரன் , அலெக்சாண்டர் ருபெனோ, சஹொய் டிகெல் ஷென் ஆகிய மூவரை ஹமாஸ் இன்று விடுதலை செய்கிறது.

இதேவேளை, அதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுபகிறது.

இதில் 36 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகள் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Post

பிரபலமான செய்தி