எக்ஸ் தள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன்!

user 12-Mar-2025 சர்வதேசம் 108 Views

எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் உக்ரைன் உள்ளதாகவும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்(Elon Musk) குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் நேற்றுமுன்தினம்(10) ஒரே நாளில் மூன்று முறை முடங்கியது.

சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களைக் கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி நேற்றுமுன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியுள்ளது.

அதனைதொடர்ந்து 20 நிமிடங்கள் கழித்து 3.45 மணிக்கு பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கு எக்ஸ் தளம் முடங்கியுள்ளது.

அதன்பின் மீண்டும் சரிசெய்யப்பட்டபோதும் மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளத்தின் செயல்பாடுகள் முடங்கிய நிலையில், பல மணி நேரம் இந்த முடக்கம் நீடித்துள்ளது.

இந்நிலையில் எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் உக்ரைன் உள்ளதாகவும் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது.

அந்தத் தாக்குதல் உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி உக்ரைன் நாட்டில் இருந்தே அது நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக எக்ஸ் பதிவில் அவர், "எக்ஸ் தளத்தின் மீது அன்றாடம் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் இது மிகப்பெரிய சைபர் தாக்குதல்.

இதன் பின்னணியில் மிகப்பெரிய வலை அல்லது ஒரு நாட்டின் தலையீடு இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

தற்போது உக்ரைன் தான் அந்த நாடு என மஸ்க் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னணியில் எலான் மஸ்க் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார்.

அதாவது, உக்ரைன் நாட்டில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. தான் மட்டும் இந்த சேவையை நிறுத்தினால் உக்ரைன் நாடு முடங்கும் என தெரிவித்திருந்தார்.

எனவே எலான் மஸ்க்கின் இந்த மிரட்டலுக்கு பதிலடியாக அவரின் எக்ஸ் தளம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி