இந்த இனத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை எதிர்கொள்வதற்கு நியாயமான முறையில் அந்த ஆபத்து எங்கே என்று வருகிறது என்பது உங்களுக்கும் தெரியும். அவர்களை விமர்சியுங்கள் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்று (27) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
”தமிழ் கட்சிகளை நாங்கள் விமர்சிப்பதில்லை. நாங்கள்தான் பிரதான கட்சி. பெரிய கட்சி. வடக்கிலும் கிழக்கிலும் சகல தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து ஒரு பிரதிநிதியாவது பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட கட்சி. எங்களுடைய கட்சி வேறெந்த தமிழ் கட்சியும் அவ்வாறு கிடையாது.
பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது இலங்கை தமிழ் அரசுக் கட்சி.