வீட்டு வாசலில் நின்ற சிறுமியை திடீரென கவ்வி சென்ற சிறுத்தை..

user 21-Jun-2025 இந்தியா 111 Views

கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களான பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட்டில் வடமாநில பெண் தொழிலாளி ஒருவர், தனது வீட்டின் பின்புறம் தனது 6 வயது மகளுடன் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது. தண்ணீர் குடத்தை வீட்டிற்குள் வைக்க சென்றார். தொடர்ந்து மறுபடியும் தண்ணீர் பிடிக்க வந்தார். அப்போது வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த சிறுமியை சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி