தோட்டத் தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம் !

user 10-Mar-2025 இலங்கை 209 Views

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பல வாக்குறுதிகள் அளித்து, பெருந்தோட்ட வாக்குகளை பெற்றதாகவும், ஆனால் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை உள்ளூராட்சி தேர்தலில், மக்கள் அரசாங்கத்திற்கு ஒரு நல்ல பாடம் கற்பிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

ஹட்டன் செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் அண்மையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலையை பார்வையிடச் சென்றபோது, அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

"உள்ளூராட்சி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பல்வேறு மாவட்டங்களில் தனித்து போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் கூட கூட்டணி சேர்வதற்கு தயார் எனவும் அதற்காக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி