சமையல் செய்ய விடாமல் தடுத்த மாமியார் மருமகள் உயிர்மாய்ப்பு

user 05-Mar-2026 இந்தியா 38 Views

சமையல் வேலையில்  மாமியால்  தொல்லையால்  மருமகள்கள்  அதிரடிகளை எடுத்திருப்பதை  சினிமாவிலும்  , நாடகங்களிலும் பார்த்திருப்போதும்.  ஆனால்  சமிஅக விடவில்லை என்பதற்காக  பெண் தற்கொலை செய்த விசித்திர சம்பவம்  ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

  இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் மருமகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சுஷ்மா (35) பிரபல நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக முன்பு பணியாற்றி வந்தவர். இவருக்கும் புனீத் குமார் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில காலமாகவே குடும்பத்தில் சிறு சிறு விஷயங்களுக்காக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குறிப்பாக, சமையல் செய்வது தொடர்பாக சுஷ்மாவிற்கும் அவரது மாமியார் கல்பனாவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை சமையல் செய்ய விடாமல் மாமியார் தடுத்து வந்ததாகவும், தன்னை தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் சுஷ்மா தனது குடும்பத்தினரிடம் முன்பே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் (03) மாமியாருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவத்தால் மனமுடைந்த சுஷ்மா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரைப் கைது செய்த பொலிஸார், தலைமறைவான மாமியார் கல்பனாவை தேடி வருகின்ற நிலையில், சமைக்கவிடவில்லை என மருமகள் உயிரை மாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி