இலங்கை சுற்றுலா தொடரில் இடம்பெறாத அவுஸ்திரேலிய அணி தலைவர் !

user 03-Jan-2025 விளையாட்டு 629 Views

இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள  இலங்கை - அவுஸ்திரேலியா தொடருக்கான சுற்றுப்பயணத்தை தாம் தவிர்க்கக்கூடும் என்று, அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் சூசகமாகக் கூறியுள்ளார்.

2025 ஜனவரி 29 தொடக்கம் பெப்ரவரி 6 ஆகிய வரை, அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி, இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில்  நாளை இடம்பெறவுள்ள ,இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின்போதே இலங்கை தொடருக்கான சுற்றுப்பயணம் தொடர்பில், கம்மின்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

கம்மின்ஸ் இல்லாத நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் அவுஸ்திரேலியாவை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம், இந்திய சுற்றுப்பயணத்தின்போது, தமது தாயார் இறந்ததை அடுத்து கம்மின்ஸ் இடையில் நாடு திரும்பியிருந்தார்.

அதேநேரம், உலக கிண்ணப் போட்டிகளில் தனது அர்ப்பணிப்பு காரணமாக தனது மகனின் ஆரம்ப வாரங்களை இழந்ததற்கு வருத்தப்பட்டதாக கம்மின்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்

எனவே, இரண்டாவது குழந்தையின் பிரசவம் இலங்கை - அவுஸ்திரேலியா தொடர் நடைபெறும் காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ளதால் ,வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிடுவது என்பது குறித்து யோசிப்பதாக கம்மின்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

 

Related Post

பிரபலமான செய்தி