பொதுத்தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

user 11-Nov-2024 இலங்கை 1359 Views

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் (Parliament Election) தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி மேலும் 232 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 09ஆம் திகதி வரையான பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் மொத்தம் 2,580 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இதுவரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் 1,999 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.  

 

Related Post

பிரபலமான செய்தி