இருமலுக்காக வைத்தியசாலை சென்ற பெண் : காத்திருந்த பேரதிர்ச்சி!

user 06-Jan-2025 சர்வதேசம் 253 Views

ரஷ்யாவில்(Russia) தொடர்ந்து இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நுரையீரலில் ஸ்ப்ரிங் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “ரஷ்யாவில் வசித்து வருபவர் இளம்பெண்ணான படுலினா சமீபகாலமாகச் சளி மற்றும் இருமலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக அவப்போது மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். ஆனாலும் சளி மற்றும் இருமல் குணமாகவில்லை. இதனால் அந்த பெண்ணின் உடல்நிலை ஒரு கட்டத்தில் மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது படுலினாவின் நிலைமையைப் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு இந்த தொடர் சளி நிமோனியாவின் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவமனையில் நினைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

எனினும், தொடர்ந்து சளி மற்றும் இருமல் அதிகரித்துக் கொண்டே இருந்ததையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, அவரது நுரையீரலில் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு ஸ்ப்ரிங் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் அறுவை சிகிச்சை மூலம் ரத்த ஓட்டத்தில் உள்ள ஸ்ப்ரிங்கை அகற்றியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,“படுலினா ரத்த உறைதல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அப்போது, அவரது உடலில் ஸ்பிரிங் பொருத்தப்பட்டுள்ளது.

இது ரத்த ஓட்டத்தின் மூலமாக அந்த ஸ்ப்ரிங் நுரையீரலுக்குச் சென்றிருக்கலாம்” என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், அந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி