சீன நிறுவனங்களின் நிதியுதவிகள் !

user 14-Jan-2025 இலங்கை 445 Views

சீன (China) நிறுவனங்களிடமிருந்து ஏற்கனவே நிதியுதவி பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க இந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்யும் நிலையில், எதிர்காலத்தில் இலங்கையின் இடைத்தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்று சீன நிறுவனங்களுக்குத் தெரிவிப்பார் என்ற தகவல்கள் தொடர்பிலேயே மனோ கணேசன் தமது கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஊழலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கையை வரவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர், இடைத்தரகர்களான இலங்கையர்களுக்கு நிதியுதவி வழங்கும் சீன நிறுவனங்களை அவர் இனங்காணவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் இத்தகைய நிதியுதவி பெற்ற இடைத்தரகர்களின் பெயர்களை தாமதமின்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிடுவது முக்கியம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி