கொழும்பில் வெடித்த போராட்டம்!

user 06-Feb-2025 இலங்கை 350 Views

கொழும்பில் சட்ட மா அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வருகை தந்திருந்தார்.

குறித்த போராட்டம் இன்றையதினம்(06.02.2025) சட்ட மா அதிபரின் திணைக்களத்திற்கு முன்னால் நடாத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்கள் மூவருக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநருக்கு, சட்டமா அதிபர் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்கேற்புடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டக் களத்திற்கு மனோ கணேசன் மற்றும் ஊடகவியலாளர் லோஷன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதனையடுத்து, அரசியல்வாதிகளின் தலையீடு இந்த போராட்டத்திற்கு தேவையில்லை என கூறியதையடுத்து மனோ கணேசன் உள்ளிட்டோர் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

Related Post

பிரபலமான செய்தி