மாத்தளை திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்பத்தல் !

user 11-Mar-2025 இலங்கை 187 Views

மாத்தளை நகரிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தல்கள் தொடர்பில் மாத்தளை பொலிசார் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளனர்.

மாத்தளை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நாளை 12ம் திகதி காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

திருவிழா இடம்பெறும் காலப்பகுதியில் மாத்தளை நகரின் ஊடாக தம்புள்ளையிலிருந்து கண்டி நோக்கியும் கண்டியிலிருந்து தம்புள்ளை வரையிலும் பயணிக்கும் சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

மாற்று வீதிகள் தொடர்பில் பொலிசார் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் , இன்றைய தினம் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 22ஆம் நாள்  மகோற்சவ பூஜைகள் இன்று நடைபெற்றது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் காவடி , தீ மிதிப்பு என்பன இடம்பெற்றிருந்தன.

Related Post

பிரபலமான செய்தி