மூன்றாம் உலகப்போர் தொடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தனது ஆட்சியால் அது நிகழ்வதைத் தடுக்கமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ,அனைவரும் உயிரிழப்பதைக் காண தனக்கு விருப்பமில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்தநிலையில் , போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், அமைதியை நிலை நிறுத்துவதற்காகவும் தான் உலகம் முழுவதும் வேகமாக சுற்றிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.