அதிருப்தியில் இலங்கை தமிழரசுக் கட்சி அங்கத்தவர்கள் !

user 12-Mar-2025 இலங்கை 120 Views

கடந்த சனிக்கிழமை (08.03.2025) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று மற்றும் போரதீவுப் பற்று ஆகிய இரு உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் அவரது தலைமையில் நடைபெற்றுள்ளது. 

இதன்போது மேற்படி இரண்டு பிரதேசங்களையும் சேர்ந்த கட்சியின் வட்டார தலைவர்கள், உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் அழைக்கப்பட்டடிருந்தனர்.

பலரும் அங்கு பிரசன்னமாகி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த வட்டாரம் ஒன்றின் தலைவருக்கு கூடத்திலிருந்து ஒருவர் அழைப்பெடுத்து இங்கு உங்களைக் காணவில்லை கூட்டத்திற்கு வரவில்லையா, என வினவியுள்ளார்.

அதன்போது அக்குறித்த வட்டாரத்தின் தலைவர் பதிலளிக்கையில் எனக்கு அந்த கூட்டத்திற்கு அழைக்கவில்லையே எப்போது எங்கு நடைபெறுகின்றது. ஏன் எமது வட்டார உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக வட்டார தலைவருக்கே தெயாமல் கூட்டம் நடாத்தப்படுகின்றது என பதிலுக்கு கூறியதாக தெரியவருகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இன்னும் உட்கட்சி மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளதோடு, கட்சியின் வட்டாரத் தலைவருக்குத் தெரியாமலேயே அந்த வட்டாரத்திற்குரிய உள்ளுராட்சி மன்ற வேட்பாளரை நியமிக்கும் நிலைமை உருவாகியிருப்பதாக அக்கட்சியை நேசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி