படலந்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது..!

user 14-Mar-2025 இலங்கை 222 Views

படலந்த ஆணைக்குழு அறிக்கையை இன்று (14) சபைத் தலைவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

படலந்த ஆணைக்குழு அறிக்கையை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (10) அமைச்சரவைக் கூட்டத்தில் படலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கமைய, ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி