திருகோணமலையில் இரு குழுக்கள் இடையே மோதல் !

user 24-Dec-2024 இலங்கை 733 Views

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் மதுபான சாலையில் உள்ள இரு குழுக்கள் இடையே மோதல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதில் ஆலிம் நகர், பாலைநகர், சகாயபுரம் மூதூர் இரண்டு பிரதேசத்தையும் சேர்ந்த மூன்று நபர்கள் காயம் அடைந்துள்ளனர்.

மேலும், தாக்குதலுடன் தொடர்புடைய 20 மற்றும் 25 வயதுடைய இருவரை மூதூர் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை 14 நாட்கள்  விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தாக்குதலில் சம்பந்தப்பட்ட சிலர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மூன்று நபர்களும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருவண்ணாமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி