மிக தூரமான சிறைக்கு அனுப்பட்ட தேசபந்து தென்னகோன் !

user 20-Mar-2025 இலங்கை 245 Views

நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் அங்குள்ள சாதாரண வார்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குணுகொலபெலஸ்ஸ சிறை உள்ள பகுதி, மிகவும் மோசமான காலநிலை உள்ள பகுதி ஆகும்.

அதுமட்டுமல்லாது எவரும் அதிகம் செல்ல முடியாத , நகரிலிருந்து மிக தூரமான பகுதியில் அங்குணுகொலபெலஸ்ஸ சிறை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

அதேவேளை  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி