கருணா, மற்றும் பிள்ளையான் ஆகியோர் குற்றவாளி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

user 24-Apr-2025 இலங்கை 57 Views

  கருணா, மற்றும் பிள்ளையான் ஆகியோர் மக்களைக் கொன்ற பெரும் குற்றவாளிகள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது பெரும் குற்றம் இழைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான முடிவாகும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் பிள்ளையாந் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே மைத்திரி, அது பற்றி எனக்கு எதுவும் கூற முடியாது.

விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டியினர் மற்றும் புலனாய்வு ப் பிரிவுக்கே அது பற்றி தெரிந்திருக்ககூடும். எனக்கு இது பற்றி தகவல்கள் தெரியவரவில்லை. பிள்ளையான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்.

அவ்வமைப்பில் இருந்து அவர் வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்தபோது நான் அமைச்சுப் பதவி வழங்கவில்லை. அப்படிபட்ட ஒருவருக்கு எப்படி பதவி வழங்கப்பட்டது என வழங்கியவரிடம் கேளுங்கள்.

Related Post

பிரபலமான செய்தி