மேசை முழுவதும் சாப்பாடு..அதைத் தலையில் சுமந்து வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்லும் தென் கொரிய உணவக முதலாளி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
55 வயது காங் ஜின் கியுவின் (Kang Jin-gyu) திறன் அவருடைய உணவகத்தைச் சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது.
அவருடைய உணவகம் சோலின் அருகே உய்டொங் பள்ளத்தாக்கில் (Uidong Valley) அமைந்திருக்கிறது.
சமையல் அறையிலிருந்து உணவுப் பதார்த்தங்களை ஒவ்வொன்றாக எடுத்துச்செல்வதற்குப் பதிலாக ஒட்டுமொத்த மேசையையும் எடுத்துச்செல்வது சுலபமாக இருக்கும் என்று காங் நினைத்த அவர் கிட்டத்தட்ட 36 கிலோகிராம் எடையுள்ள 10 பேருக்கான உணவு பானங்களை சிந்தாமல் சிதறாமல் தலையில் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டவராவார்.