ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கு – இன்று தீர்ப்பு!

user 30-Sep-2025 இந்தியா 63 Views

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக  அறிவித்தனர்.

இதனையடுத்து கடந்த மாதம் இருவரும் ஒரே காரில் சென்னை குடும்ப நல கோர்ட்டிற்கு வந்து பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 25ஆம் திகதி  நடைபெற்ற விசாரணையின் போது ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

 

வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவிருந்தார். இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கிற்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி