அதிகரிக்கும் போர் பதற்றம்..

user 23-Jun-2025 சர்வதேசம் 115 Views

ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றமை மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான்- இஸ்ரேல் இடையே, 10 நாட்களாக தொடரும் போர் இரு நாடுகளிலும் உள்ள வெளிநாட்டவர்கள் அவசரமாக சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர்.

அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் முற்றிலுமாக கைவிடாத வரையில், போரை நிறுத்த மாட்டோம்' என்று இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கி ஈரான் மீது தாக்குஇதலை நடத்தி வருகின்றது.

அதேவேளை ஈரானில் உள்ள மூன்று முதன்மையான அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளோம், என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இஸ்ரேலின் நீண்ட கால எதிரியான ஈரானுக்கு ஆதரவாக இருந்து வரும் ரஷ்யா, சீனா, துருக்கி போன்ற நாடுகள் அமெரிக்காவை பலமாக கண்டித்துள்ளன. இந்நிலையில், ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதுடன் இஸ்ரேல் அரசாங்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படும் எனவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Post

பிரபலமான செய்தி