அமெரிக்க எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாரிய போர் கப்பல் !

user 18-Mar-2025 சர்வதேசம் 207 Views

அமெரிக்காவின் தெற்கு எல்லையில் ஏவுகணைகளை சுமந்து செல்லும் டெஸ்ட்ரோயர் USS கிரேவ்லி(destroyer USS Gravely) எனப்படும் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாயை கைப்பற்றுவேன் என கூறி வருகின்றார்.

இதேநேரம், அமெரிக்க படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், டசன் கணக்கான டோமாஹாக் ஏவுகணைகளை சுமந்து செல்லக்கூடிய கப்பலான டெஸ்ட்ரோயேர் USS கிரேவ்லி, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்குடன், ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடந்த போரில் இந்த கப்பல் 9 மாதங்கள் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி