அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உறுப்புரிமை!

user 16-Jan-2025 இலங்கை 470 Views

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனுமீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அபிநவ நிவஹல் பெரமுண அமைப்பின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அர்ச்சுனா இராமநாதன், அரசாங்க மருத்துவராக பணியாற்றிக் கொண்டே, சட்டரீதியாக மருத்துவத் தொழிலில் இருந்து விலகாமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், எனவே அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யுமாறும் ஓஷல ஹேரத் குறித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனு மீதான விசாரணை நேற்று (15) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் கொபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது தனது தரப்பு நியாயங்களை எதிர்மனுவாக முன்வைக்க அர்ச்சுனா இராமநாதன் தரப்பில் வழக்கறிஞர் ஊடாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும் தற்போதைக்கு வழக்கு விசாரணைக்கான நீதிபதிகள் அமர்வு பெயரிடப்படாத நிலையில், அடுத்த தவணையில் அதனை முன்வைக்குமாறு அறிவுறுத்திய நீதியரசர் கொபல்லவ, வழக்கின் விசாரணையை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.  

 

Related Post

பிரபலமான செய்தி