கடந்த 8 வருடங்களுக்கு பின்னர் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்
மாணவன் கே.முகேஷ் வெட்டுப் புள்ளிக்கு மேல் 149 புள்ளிகள் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.அவரையும் புலமை பரீட்சையில் 70புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் விழா பாடசாலை அதிபர் கே.பிரஹீதன் தலைமையில் நடைபெற்றது.
அவரைக் கற்பித்த ஆரம்பக் கல்வி ஆசிரியர் சிவசுந்தரம் சிவாகரன்( காரைதீவு) பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மாணவர்களுக்கு இனிப்புக்களும் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்ற மாணவன் முகேஷ்க்கு பொன்னாடை, மாலை அணிவித்து பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.