வவுனியாவில் நோயாளர்கள் பாதிப்பு !

user 18-Mar-2025 இலங்கை 189 Views

இலங்கையில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பகுதியினர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, வவுனியாவிலும் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக வவுனியாவில் பொது வைத்தியசாலைக்கு தூர இடங்களில் இருந்து வரும் 600இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பிச்செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு 600இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் உட்பட மொத்தமாக 1000 பேர் வரை நாளாந்தம் மருத்துவ தேவைக்காக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி