குடும்பத்தினருடன் இலங்கைக்கு வந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் பிரபலம்!

user 05-Jan-2025 இலங்கை 776 Views

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

இவர் காலி, அஹுங்கம உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களைக் கண்டுகளிக்கவுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் முச்சக்கரவண்டியில்  இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவுள்ளார்.

ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் முச்சக்கரவண்டியில் பயணம் செய்யும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகுின்றது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் இலங்கைக்கான வருகை இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post

பிரபலமான செய்தி