கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அவல நிலை !

user 09-Jan-2025 இலங்கை 691 Views

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவை 24 மணித்தியாலத்திற்கு அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய அதிகாரிகளுக்கு சுகாதார துறையினர் சுகாதாரத்தை பேணுமாறு தெரிவித்தனர்.

இருப்பினும், இதுவரையில் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்றையதினம் (08-01-2025) கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இங்கு சென்ற நிலையிலே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Post

பிரபலமான செய்தி