கொழும்பில் சிறீதரன் மீது வக்கிரத்தை கொட்டித்தீர்த்த சாணக்கியன்!

user 10-Jan-2025 இலங்கை 724 Views

கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மிகவும் வக்கிரமான தொனியில் பேசியதாக அரசியல் ஆய்வாளர் தி. திபாகரன் தெரிவித்துள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி, பொது இடங்களில் கருத்து தெரிவிக்கும் போது, தனது வார்த்தைகளை கவனமாக வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே கட்சிக்குள் இருப்பவரை பகை முரண்பாடுடன் பார்ப்பதை இதில் இருந்து அவதானிக்க கூடியதாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகை முரண்பாடு இனவாத அரசியல்வாதிகளுடன் இருக்க வேண்டுமே ஒழிய, தமிழ் தரப்பிற்குள் இருக்கக் கூடாது என திபாகரன் வலியுறுத்தியுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி